Tuesday, May 19, 2015

‘கும்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கான ஒரு இடத்தை பிடித்துக்கொண்டுள்ள நடிகை லட்சுமி மேனன். 

விக்ரம் பிரபு, சசிகுமார், விஷால், கார்த்தி என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் கைகோர்த்து நடித்துள்ள லட்சுமி மேனன் நடித்த பெரும்பாலான படங்களும் வியாபார ரீதியாக வெற்றிபெற்ற படங்களே! அதனால் இவர் ‘லக்கி ஸ்டார்’ என்று கருதப்படுகிறார்கள்! 

தற்போது ‘தல’ அஜித்துடன் நடிக்கவும் லட்சுமி மேனனுக்கு வாய்ப்பு கிடைத்து, அவருடன் நடித்து வருகிறார். ‘வீரம்’ சிவா இயக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. 

‘தல’ அஜித்துடன் நடிக்கும் சந்தோஷத்தில் இருக்கும் லட்சுமி மேனனுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியாக இன்று அவருக்கு பிறந்த நாள்! ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் லட்சுமி மேனனுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

0 comments:

Post a Comment