Saturday, May 16, 2015


 ’லிங்கா’ படத்தின் பிரச்னைகள் நிறைவடைந்ததை அடுத்து ரஜினி அடுத்த படத்தின் வேலைகளில் பிசியாகிவிட்டார். அடுத்ததாக ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்திலும் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செல்வில் ஒரு அறிவியல் சார்ந்த படத்திலும் நடிக்க இருக்கிறார். 
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என சொல்லப்படுகிறது. எனினும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை. சந்தோஷ் நாராயணன் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் சொல்லி கூடவே சுவாரஸ்யமான அறிவிப்பு இந்த வாரத்தில் வருகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதுகூட இந்த படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ரஜினி முழுதாக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். ’மெட்ராஸ்’,’அட்டக்கத்தி’ என எதார்த்தமான சினிமா எடுக்கும் இயக்குநரான ரஞ்சித் ரஜினியை வைத்து எப்படிப்பட்ட படம் தர இருக்கிறார் என்பது இப்போது வரை சிதம்பர ரகசியமாகவே  இருக்கிறது.

0 comments:

Post a Comment