Saturday, May 16, 2015


செல்வராகவன் இயக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்துகொண்டிருக்கிறது. இரவில் மட்டும் நடக்கும் அந்தப்படப்பிடிப்பில் சரியாகக் கலந்துகொள்கிறாராம் சிம்பு. படப்பிடிப்பு தொடங்கிவிட்டாலும் அந்தப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 

ஒரு படத்துக்குப் பெயர் வைப்பது மிகஇயல்பான நிகழ்வாக இருந்த காலம் போய்விட்டது. பெரிய கதாநாயகர்களின் படங்களுக்குப் பெயர் வைப்பதையே ஒரு பெரியசெய்தியாக்குகிற போக்கு அண்மையில் நடந்துகொண்டிருக்கிறது. மொத்தப்படப்பிடிப்பும் முடிந்தபின்பு பெயர் வைத்த படங்களெல்லாம் இருக்கின்றன. அதுவரை பல பெயர்களை அவர்களுக்குள் விவாதிப்பார்கள்.
அவர்கள் முடிவு செய்யும் பெயரை வேறு யாராவது பதிவு செய்துவைத்திருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். அப்படிப் பதிவு செய்து வைத்திருந்தால் அவர்களிடம் பேசி வாங்க வேண்டும், கிடைக்கவில்லையென்றால் வேறு பெயர் தேடவேண்டும் என்று போய்க்கொண்டிருக்கிறது தமிழ்த்திரையுலகம்.  இப்போது படப்பிடிப்பு நடக்கும் சிம்பு படத்துக்கும் அவர்கள் ஒரு பெயரை முடிவுசெய்து வைத்திருக்கிறார்களாம். 

அந்தப்பெயர் கானகம் என்று சொல்லப்படுகிறது. அந்தப்பெயர் இல்லையென்றால் அதன் சுருக்கமாக கான் என்று வைத்துவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்களாம். யார் எப்படிப் பேசினாலும் அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்தான் உறுதி.

0 comments:

Post a Comment