சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால், சமுத்திரகனி, சூரி, நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாயும் புலி’. படத்திற்கு இசை டி.இமான். இப்படத்தின் பெயர் படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் சரியான அனுமதி பெற்றுவிட்டுத்தான் தலைப்பாக வைத்தோம் என விஷால் கூறினார்.
சமீபத்தில் படத்தை பாண்டிராஜுக்கு சுசீந்திரன் போட்டுக் காட்டியுள்ளார். பாண்டிராஜுக்கு படம் மிகவும் பிடித்துவிட்டதாம். படம் குறித்து ட்விட்டரிலும் கருத்து தெரிவித்துள்ளார், ‘ முழு படத்தையும் பார்த்து எஞ்ஜாய் செய்தேன்’. கண்டிப்பாக சுசீந்திரன் மற்றொரு படத்தை விஷால் , காஜல் அகர்வாலுடன் பண்ண வேண்டும் என விரும்புகிறேன்’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

படத்தின் கதை 2012ல் கொலை செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதனையும் அவரின் கொலைக்கான பின்புலத்தையும் மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் இதுகுறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஆல்வின் ‘ உங்களுக்காக இந்த படத்தை உருவாக்குவதில் பெருமைப் படுகிறேன் என ட்வீட் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment