Tuesday, May 5, 2015

ஏ.ஆர்.முருகதாசை அதிர்ச்சியாக்கிய புதுமுக இயக்குனரின் பட போஸ்டர் - Cineulagam
இன்றைய தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களின் மனதுக்கு பிடித்த இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரிடம் உதவியாளர்களாக இருந்த பல துணை இயக்குனர்கள் தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளனர்.
ஆனால் இது போல் பிரபலமானவர்களின் துணை இயக்குனர்கள் நாங்கள் என்று சொல்லி பல புது தயாரிப்பாளர்களிடம் படவாய்ப்பு பெறுவது வழக்கமாகி வருகிறது.
அந்த வகையில் இருவர் ஒன்றானால் என்ற புது படத்தின் போஸ்டர் நேற்று நாளிதழில் வெளியானது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அந்த போஸ்டரில் "From the Associates of A.R.Murugadoss" என்ற வாசகம் இடம் பெற்றதால் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் பயங்கர அதிர்ச்சி, என்னவென்று விசாரித்து பார்த்தால் அந்த புதுமுக இயக்குனர் எந்த காலத்திலும் முருகதாஸிடம் வேலை பார்த்ததே இல்லையாம்.
இந்த விஷயம் முருகதாஸ் காதில் விழ, அவரும் டென்சனாகி விட்டார். உடனே அந்த தயாரிப்பாளரை கூப்பிட்டு இவர் என்னிடம் வேலை செய்ததே இல்லை. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எதுவும் செய்யாதீர்கள் என்று எச்சரித்தார்.
மேலும் அந்த இயக்குனர் மீது நான் இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுக்க போகிறேன் என்றும் கூறியுள்ளாராம்.

0 comments:

Post a Comment