Saturday, May 16, 2015


நடிகை சன்னி லியோனை இந்தியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சன்னி லியோன் கனடா நாட்டின் குடியுரிமை கொண்டவர். அவர் நடித்த ஆபாசப் படங்கள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.

அண்மைக்காலமாக அவர் மும்பையில் இருக்கிறார். பாலிவுட் திரையுலகில் தடம் பதித்துள்ளார் அவர். இந்நிலையில் சன்னி லியோன் தனது ஆபாச இணையதளத்தால் இளம் வயதினர் மனதில் காமத்தை தூண்டுவதாக ஹிந்து ஜன்ஜக்ருதி சமிதி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மும்பை காவல் நிலையத்திலும் ஹிந்து ஜன்ஜக்ருதி சமிதி புகார் அளித்துள்ளது. மேலும் அந்தப் புகார் மனுவில், இளம் நெஞ்சங்களில் ஆபாசத்தை விதைக்கும் சன்னி லியோன் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment