Friday, May 15, 2015

நல்லது செய்த விஜய்யை இப்படியா பேசுவது? - Cineulagam
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு முன் வரிசையில் உள்ள நடிகர்களில் விஜய்யும் ஒருவர். இவர் பல நலத்திட்ட உதவிகளை தன் நற்பணி மன்றங்கள் வாயிலாக செய்து வருகின்றார்.
இந்நிலையில் விஜய் சொல்லி தான் தெரிய வேண்டியது இல்லை, நாங்களே செய்வோம் என்று நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை இங்கிருந்து கொடுத்தனர்.
ஆனால், ஒரு சிலர் இதை Publicity என்று சொல்லி கலங்கப்படுத்தி வருகின்றனர். அவர் கூறாமலேயே ரசிகர்கள் செய்த உதவியை பாராட்டவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, ஆனால், அதை கலங்கப்படுத்தும் படி பேசுவது எந்த விதத்தில் நியாயம்.
ஒரு ரூபாய் உதவி செய்தால் கூட அதை தற்பெருமையாக சொல்லி காட்டும் இந்த தருணத்தில், இப்படி ஒரு உதவி செய்த விஜய் ரசிகர்களை கண்டிப்பாக பாராட்டி தான் ஆகவேண்டும்.

0 comments:

Post a Comment