
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் "மாஸ்". இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார்.
இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ப்ரணிதா, பிரேம்ஜி, பார்த்திபன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
யுவன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும் படம் பற்றிய ஆர்வம் அனைவர் மத்தியிலும் எழுத்துள்ளது. இப்படம் மே 29-ம் திகதி வெளியாகிறது.
இந்த திகதியில் சூர்யா தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள "ஹைக்கூ" படத்தின் டிரைலரையும் வெளியிடவுள்ளனர்.
இது சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்துள்ளது. "ஹைக்கூ" படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
0 comments:
Post a Comment