Friday, May 15, 2015

இனிமே இப்படித்தான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி, நன்பேண்டா படத்துல, நா நல்ல டான்ஸ் ஆடுனதா எல்லாம் சொன்னாங்க. அதுக்கு முக்கிய காரணமே என் நண்பன் சந்தானம் தான்.

என்கூட சாங் ஷூட்டிங் பண்ணுபோது, அடிக்கடி எதாவது சொல்லிட்டே இருப்பாரு... இப்போ ஷூட் வச்ச வெயிலுல போட்டு கொள்ளுவானுங்க... பாட்டு வேற ரொம்ப நல்ல இருக்கு. நல்ல பாட்டுக்கு என்னபோய் டான்ஸ் ஆட சொல்லுறானுங்க. இப்போ நீ, சரின்னு சொன்ன அவளோ தான். முடியாதுன்னு சொல்லிடு சாயங்காலமா டான்ஸ் ஆடி கலக்கலாம்னு சொல்லுவாரு.

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துல டான்ஸ் பிச்சு உதருனாறு. அவரு டான்ஸ் பாத்துட்டு நா ரொம்ப இப்ராஸ் ஆயிட்டேன். சந்தானமே இப்படி டான்ஸ் ஆடுறாரு. நாமளும் டான்ஸ் ஆடணும் முடிவு பண்ணுனேன். அப்போ ரெண்டு பேரும் போட்டி வச்சுக்கிட்டோம், யாரு நல்ல டான்ஸ் ஆடுறதுன்னு. அதுகாரணமா தான் டான்ஸ் ஆடுனேன்.

சந்தானம் அடிக்கடி சொல்லுவாரு நா பெரிய மைக்கல் ஜாக்சன் நீ பெரிய பிரபு தேவா நமக்குள்ள போட்டி வேறயான்னு. இப்போ அவரு ஹீரோவ நடிக்கிறதுன்னு முடிவு பண்ணுனதுல சந்தோசமா இருக்கு என உதயநிதி பேசினார்.

0 comments:

Post a Comment