அந்த மாதிரி ஹீரோக்களுடனும் நடிக்க தயார்- நித்யாமேனனுக்கு வந்த தைரியம்
மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்கள் நித்யாமேனனுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்காதபோதும், சமீபத்தில் அவர் நடித்த ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்கள் அவரை வெற்றிப்பட நாயகியாக்கி விட்டன.
இதுவரை அவரை கண்டுக்கொள்ளாமல் இருந்த கமர்சியல் டைரக்டர்கள் இப்போது அவரிடம் கால்சீட் வாங்க நீண்ட கியூவில் நிற்கின்றனர்.
அதோடு, உயரமான ஹீரோக்களுடன் நடிப்பதற்கு ஏற்ற உயரம் அவரிடம் இல்லை என்பதை சிலர் சுட்டிக்காட்டி, பாடல் காட்சிகளில் எப்படி நடனமாடுவீர்கள்? என்கிறார்களாம்.
அதற்கு, ராணி ருத்ரம்மா தேவி படத்தில் 6 அடிக்கும் அதிகம் உயரம் கொண்ட அனுஷ்காவுடன் இணைந்து ஒரு பாடலில் நான் நடனமாடியிருக்கிறேன். அப்போது அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ் அணிந்து கொண்டு நடனமாடினேன்.
அப்போது எனது உயரம் ஒரு குறையாகவே தெரியவில்லை. அதனால், எத்தனை பெரிய உயரமான ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்கக்கூடிய தைரியம் இப்போது எனக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வருகின்றார் நித்யாமேனன்.

0 comments:
Post a Comment